Saturday, March 24, 2012

குறிகட்டுவான் கடலில் வீழ்ந்து இளைஞன் தறகொலை முயற்சி.

இன்று காலை குறிகட்டுவான் கடலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞன் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் அவரது வாயில் இருந்து வெண்நுரை வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனால் அவர் ஏற்கனவே நஞ்சு அருந்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்யும் நோக்கிலேயே கடலுக்குள் குதித்த்தாக தெரிவிக்கப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இருந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவரை காப்பாற்றி ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸர் மற்றும் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயினாதீவைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ஸ்ரீ ஞானவைரவர் படகிலிருந்தே மேற்படி இளைஞர் கடலுக்குள் குதித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
கடலுக்குள் குதித்த இளைஞன் 05 வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பிரியங்கன் (வயது – 30) தற்போது இவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP