Saturday, March 24, 2012

கலட்டி பிள்ளையாரின் மகிமை - சுவிசிலிருந்து புங்கையூர் மதி .

ஆலடிச் சந்தியிலிருந்து நாலடிக் காலடிச் சுவடு
வைத்தால் வரும் கலட்டிப் பிள்ளையார் கோவில்!
அவனைக் காலமெல்லாம் உச்சரிப்போம் நாவில்
கலட்டிப் பிள்ளையார் அருள் பொங்கும் புங்குடுதீவில்!

சுத்தமான மனதுடன் நித்தமும் வணங்கு
நினைப்பது நடக்கும்! எத்தனை கொடிய
துன்பங்கள் வந்தாலும் தொப்பை அப்பனை
நினைத்தால் நொடியினில் பறக்கும்!

சக்தி சிவனின் மூத்த பிள்ளை - அவனை
பக்தியோடு நினைத்தால் தீரும் தொல்லை!
தித்திக்கும் முக்கனிகள் கொண்டு படைத்திட்டால்
எத்திக்கும் எங்கும் நமக்குத் துணை வருவான்!

சங்கரன் உமையே உலகம் என்று சுற்றி வந்து
ஐங்கரன் மாங்கனி பெற்றுக் கொண்டான்!
சங்கடம் யாவும் தீர்த்து வைப்பான் வாழ்வில்
மங்கலம் மலர வழிகள் செய்வான்!

புங்கையூர் எனும் புண்ணிய பூமியில் வாழ்ந்த நல்லவர்
எல்லாம் எங்கு சென்றார்! அல்லவர் வந்து குடி கொண்டதால்
கூடவே அல்லலும் பெருகிற்று, புல்லரைப் பூண்டோடு
அழித்திடுவாய்! நல்லவரை மீண்டும் வாழ வைப்பாய்!

நம்பிக்கையோடு நாம் பூசைகள் செய்தோம்
தும்பிக்கையானே நீ! கண் பார்க்கவில்லை.
அம்பிகை மைந்தனே! பிள்ளையாரே! எனக் கூவியழுதோம்
எம் அழுகுரல் உன் செவிகட்குக் கேட்கலையோ?

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP