Monday, December 26, 2011

புங்குடுதீவில் பெண்கள் வலுவூட்டல் செயலமர்வில் யாழ்.அரச அதிபர் இமெல்டா

பெண்கள் வலுவூட்டால் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு இன்று புங்குடுதீவில் இடம்பெற்றது.

புங்குடுதீவு சர்வோதய இயக்குனர் செல்வி யமுனாதேவியின் தலைமையில் UNDP நிறுவனத்தின் அனுசரணையுடனும் புங்குடுதீவு பெண்கள் வலுவூட்டத் திட்டப் பகுதியினரும் இணைந்து பெண்கள் வலுவூட்டல் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வை இன்று நடத்தினர்.



புங்குடுதீவு மாதர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாதர் சங்கம், வியாபார உற்பத்தி தொடர்புடையவர்கள், கைத்தொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள், சுழற்சி கடன்திட்டத்தின் ஊடாக சிறுதொழில் செய்பவர்கள், பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பெண்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அகில இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் வேலணை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் உரையாற்றுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை தொடர்பிலும், அதற்கான காரணங்களை நாம் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பெற்றோர் பெண் பிள்ளைகளின் விடையத்தில் மிக கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும் என்றும் கருத்துரைத்தார்.




0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP