புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும் தற்போது கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி இரத்தினசபாபதி அவர்கள் 21-12-2011 புதன்கிழமை அன்று காலமாகி விட்டார்.
அன்னார், வெண்கலகடை SK நல்லதம்பி கண்ணம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வனும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதியினரின் அருமை மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஸ்கரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
தனஞ்ஜினி(தனுஷா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அம்பிகாதேவி(கொழும்பு), பிறேமாதேவி(கமலா - இந்தோனேசியா), தவமணிதேவி(கௌரி - நியூசிலாந்து), தர்மராசா(ராசன்- கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
Dr.சண்முகரத்தினம்(கொழும்பு), சிவநாதன்(இந்தோனேசியா), குணரத்தினம்(நியூசிலாந்து), நந்தினி(கொழும்பு), இராஜேந்திரம்(கனடா - பிரம்டன்), கோபாலபிள்ளை(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சியாமளன், சேயோன், ஐஸ்வர்யா ஆகியோரின் அருமைப் பேரனும்,
செ.பாலசுப்பிரமணியம் அவர்களின் சகலனும், சரஸ்வதிதேவி, சரோஜினிதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும், இரத்தினராசா-இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் சம்பந்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment