நாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா?
உயர்ந்த சிந்தனையில் சிறந்த செயல்பாடு
”எத்தனையோ வீடுகள்
பராமரிப்பின்றி அழிந்து போய் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற மாற்றங்களை எம்மவர்
செய்தால் எமது ஊரின் வளர்ச்சி அபரிதமாகும்”
தனது தந்தையின் ஞாபகார்த்தமாக இங்கே அனைத்து மாணவர்களும் கட்டணம் இன்றி பாடசாலை தவிர்ந்த நேரங்களில் கல்வி வசதியைப் பெறுமாறு ஒழுங்கு செய்துள்ளார்கள்.
நாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா?
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டை அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியேக கல்வி வழங்கும் சேவை நிலையமாக மாற்றி காட்டி ஒரு முன்மாதிரியான செயலை தொடக்கி வைத்துள்ளார் லண்டனில் வசிக்கும் சொக்கலிங்கம் கருணைலிங்கம் .
தனது தந்தையின் ஞாபகார்த்தமாக இங்கே அனைத்து மாணவர்களும் கட்டணம் இன்றி பாடசாலை தவிர்ந்த நேரங்களில் கல்வி வசதியைப் பெறுமாறு ஒழுங்கு செய்துள்ளார் இந்த பெருந்தகை .
எத்தனையோ வீடுகள் பராமரிப்பின்றி அழிந்து போய் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற மாற்றங்களை எம்மவர் செய்தால் எமது ஊரின் வளர்ச்சி அபரிதமாகும் என்று இவர் குறிப்பிடுகின்றார் .இந்த நிலையத்தின் மின்கட்டணம் போன்ற உதிரி செலவுகளுடன் ஆசிரியர் சம்பளத்தையும் இவரே செலுத்தி வருகின்றார்.
இந்த உயர்ந்த கனதியான முயற்சியை நம் மனதார பாராட்டுகிறோம் .இவரை பின்பற்றி நாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா…
0 comments:
Post a Comment