புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-20 சிவபுரம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சொர்ணலிங்கம் அவர்கள் 30-04-2011 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவா(கனடா), கீதா(கனடா), சுதன்(கனடா), கல்பனா(இலங்கை), சசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகராசா(கனடா), உதயகுமார்(கனடா), ஜெனிரா(கனடா), திருவருட்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற துரைராசா, கலைமகள்(இலங்கை), வில்வரெட்னம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணி(இலங்கை), காலஞ்சென்ற நடராசா, நிர்மலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இராசமணி, கனகராசா மற்றும் மங்கையற்கரசி(கனடா), புஸ்பம்(இலங்கை), மரகதம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, காலஞ்சென்ற தர்மலிங்கம், சோமசுந்தரம், மற்றும் தங்கவடிவேல்(இலங்கை), பேரின்பநாதன்(அம்மன் நகைமாளிகை - கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கனடாவில் வசிக்கும் சர்மிதா, லக்சனா, அஷ்சன், சகீதா, ஆரங்கன், அட்சிதா, அதிஸ், இலங்கையில் வசிக்கும் பிரவீன், தர்சிகா, மருதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment