Wednesday, March 23, 2011

நடுக்கடலில் தரித்துள்ளது வடதாரகை குறிகாட்டுவான்- நெடுந்தீவுப் பயணத்தில் பெரும் சிரமம் .

நெடுந்தீவு குறிகாட்டு வான் சேவைக்கென நெடுந்தீவு மக்களின் நலன் கருதிக் கொண்டு வரப்பட்ட வடதாரகை-2 நடுக் கடலில் நங்கூரமிட்டுள்ளது. இங்கு சேவையில் ஈடுபட்டு குமுதினி தனது சேவையை சீராக மேற்கொள்ள முடியாது அடிக்கடி பழுதடைந்து போனது.

இது வடதாரகையின் தேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உணர்த்தியிருந்தது. இந்த நிலையில் கடும் முயற் சிக்கு மத்தியில் ஒரு வகையாக நெடுந்தீவுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட வடதாரகை சேவையைத் தொடரமுடியாது நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி குமுதினியும் வடதாரகையுடன் சேர்த்துக் கட்டி விடப்பட்டுள்ளது. இவை சேவையில் ஈடுபடாது நடுக்கடலில் விடப்பட்டுள்ள மைக்கு இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சிலரின் அசமந்தப்போக்கே முதற் காரணம் என நெடுந்தீவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றர்.

நெடுந்தீவுத் துறைமுகம் ஆழமின்மையால் அங்கு தரித்து நின்று சேவையில் ஈடுபட முடியாத நிலையில் வடதாரகை உள்ளது.காலாகாலமாகக் கோடை காலங்களில் இந்தப் பகுதியில் கடல்வற்றுக் காணப்படுவது வழமை.

இந்த நிலையில் பெரிய படகான வடதாரகையின் வருகையை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் முன்னரே அறிந்திருந்தபோதும் துறைமுகம் ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை.

துறைமுகப் பகுதி ஆழமாக் கப்படவேண்டும் என்று உயர் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்ற போதும் செயலளவில் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

வடதாரகை வந்து சேர்ந்து இரண்டு மாதங்களாகிவிட்ட நிலையிலும் இதற்கான ஆரம்பக்கட்ட நவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் குமுதினியின் சேவையையும் இழந்து நிற்கின்றனர் நெடுந்தீவுப் பகுதி மக்கள்.

இந்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்தப் பணிக்கான கேள்வி கோரல் அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP