Tuesday, March 1, 2011

புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்)2011ம் ஆண்டு மஹோற்சவ பத்திரிகை.


புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்)
ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம்
மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் - 2011
விநாயகப் பெருமான் அடியார்களே!



ஆன்மீக நெறியும் நிறைந்த இலங்காபுரியின் வடபகுதியில் சைவமும், தமிழும், தானதர்மமும், குருபக்தியும், இறைபக்தியும் நிறைந்த புண்ணிய சீலர்களைத் தோற்றுவித்து அகில உலகிலும் நமது சமயக் கலாச்சாரத்தை வளர்த்து பெருமை படைத்த புங்குடுதீவு கிழக்கில் கலட்டி என்னும் திவ்விய திருப்பதியில் கோவில் கொண்டு உலகம் முழுவதும் வாழும் பக்தர்களைக் காத்து ரட்சிக்கும் கருணைத் தெய்வமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் திருவருளால். நிகழும் மங்களகரமான விகிர்தி வருடம் 10.03.2011 வியாழக்கிழமை முதல் 19.03.2011 சனிக்கிழமை வரை பத்து தினங்கள் மஹோற்சவம் நடைபெறவுள்ளது. அடியார்கள் நிகழ்ச்சி நிரலின்படி தினமும் ஆசாரசீலர்களாக வருகைதந்து ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்று சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறோம்.

தினமும் காலை 8:30 மணிமுதல் 12:30 மணிவரையும் பகல் திருவிழாவும் மாலை 6:00 மணிமுதல் இரவு 8:30 மணிவரை இரவுத் திருவிழாவும் நடைபெறும். தினமும் வேதபாராயணம், ஆன்மீக சமயச்சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை, மங்கள இசை என்பனவும் தினமும் சிறப்பான அலங்காரங்களுடன் விநாயகப் பெருமான் வீதியுலாவரும் அருட்காட்சியும் இடம்பெறும். அனைவரும் வந்து தரிசித்து இறையருள் பெறுக!

இங்ஙனம்:
இறைபணியில் நிற்கும் 'சிவாச்சார்ய கலாநிதி" 'சிவாச்சார்ய குலபூஷணம்"
சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் (ஐயாமணி ஐயா)
(மஹோற்சவகுரு, ஆலய முதல்வர், ஆலய பிரதமகுரு)
கனடா 1 416 266 3333 e-mail: vijayankurukkal@gmail.com
கலட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
புங்குடுதீவு-10, இலங்கை 077 724 5178

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP