யா/புங்குடுதீவு மகாவித்தியாலயம்
புங்குடுதீவு மக்களின் அறிவுகண்ணை திறந்த மாபெரும் பாடசாலை இதுவாகும்.புங்குடுதீவின் சந்தையடி என்னும் பகுதியில் முன்பகுதியில் வெள்ளி விழா இரட்டை மாடிக் கட்டிடதோடு கம்பீரமாக காட்சியளிக்கும் மகாவித்தியாலயம் பல் வேறு சாதனைகளைப் படைத்து வேறுபட்ட விற்பன்னர்களை உருவாக்கிய பெருமையோடு எழுந்து நிற்கின்றது.
இலங்கைக்கு இலவசக் கல்விமுறையை அறிமுகப் படுத்திய சீ டபிள்யூ டபிள்யூ கன்னங்கராவின் காலத்தில் தீவுப்பகுதி பா.உ ஆகவும் சபாநாயகராகவும் இருந்த சேர் வைத்திலிங்கம் துரைசாமி அவர்களின் முயற்சியினால் புங்குடுதீவு அரசினர் கனிஸ்ட ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரில் 17.01.1946 இல் ஆரம்பிக்கப் பட்டது.இந்த பாடசாலையை ஆரம்பிக்க முன்னின்று உழைத்தவர்கள் புங்குடுதீவின் கல்வி தந்தை பசுபதிபிள்ளை, க.அம்பலவானர், ஆ.சரவணமுத்து,உடையார் க.யோகுபிள்ளை ஆகியோருமாவர். இவ்வித்தியாலயம் முதலில் 150 மாணவர்களுடன் கணேச மகா வித்தியாலயத்தின் ஓரு பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது .க.அம்பலவாணர் தனது பெருங்கருணையால் சொந்த காணியை தற்போது உள்ள இடத்தில் பாடசாலை அமைத்து கொடுத்து கட்டிட வேலைகளை ஆரம்பித்தார்.புங்குடுதீவு மக்களின் சொந்த நிதி உதவியால் புதிய அகட்டிடம்03.03.1948 இல் கட்டபட்டு இந்த இடத்துக்கு பாடசாலை மாற்றப்பட்டது.(தொடரும்... )
பழைய மாணவர்கள் யாராவது இந்தப் பாடசாலைக்கு ஏதாவது செய்ய விரும்பினால் கீழ்க்காணும் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு உங்கள் உதவியைச் செய்யலாம்.
School development society
Bank of ceylon 2nd Branch Jaffna
Account No 1094435

0 comments:
Post a Comment