Saturday, February 19, 2011

யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம் .

புங்குடுதீவில் உள்ள உயர்தர பாடசாலைகள் ஐந்தில் இதுவும் ஒன்றாகும் . வாணர் தாம்போதி ஊடாக புங்குடுதீவினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் இருமருங்கிலும் கட்டிடக் கலையை பறை சாற்றுவது போல அழகான இரண்டு தோற்ற மிளிரவு எம் மனசை தொட்டு செல்லும் .

ஓன்று இடப்பக்கத்தில் இரண்டு மாடி கட்டிடத்தை முன்னணியை கொண்டு கட்சி தரும் இந்த பாடசாலை .மற்றது வலப்பக்கத்தில் சிறப்பாக கோலோச்சும் சிங்கரவேலன் சந்நிதி . ஆரம்பத்தில் சைவப்படசாலை வேதப்பாடசாலை என இரண்டாக நிர்வகிக்கப் பட்ட இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டு கமலாம்பிகை மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது.ஓரு இரண்டு மாடிக்கட்டிடம் உட்பட நன்கு கட்டிடத் தொகுதியை கொண்டது இந்தப் பாடசாலை.இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு மடத்துவெளி சனசமூக நிலையமும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ,பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளும் பெறும் பங்காற்றியுள்ளன. அத்தோடு இந்த பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்ட வேண்டும்,

1935செப்டம்பர் 16ஆம் திகதி ஐந்து மாணவர்களுடனும் இரண்டு ஆசிரியர்களோடும் யாழ்ப்பாணம் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது கிழக்கே மத்தியில் அமைந்துள்ள ஒரே ஓரு கட்டிடத்துடன் தனது கல்விப் பணியை தொடங்கியது. இதன் அருகே தென் மேற்ற்க்கு பக்கமாக பெரிய ஆல மரத்தின் கிழக்கே ஐரோப்பிய ஆட்சியில் மிஷனரிமார்களினால் யா /புங்குடுதீவு அமெர்க்கன் மிஷன் பாடசாலை இயங்கி வந்தது.1962 ஆம் ஆண்டு ஜூன் வரை யாழ் சைவ வித்தியா அபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த இப்பாடசாலை அரசினர் பாடசாலை ஆக்கபட்டது .இதனைத் தொடர்ந்து1962 செப்டம்பர் இல் அருகாமையில் இருந்த மிசன் பாடசாலையும் 1318ஆம் இலக்க சட்ட்டத்தின் படி கையகப் படுத்தப் பட்டு ஒன்றாக்கப் பட்டது .அன்று முதல் இந்த பாடசாலையின் பெயர் யாழ் புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது .முதலில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த இப்பாடசாலை 1969 இல் ஆறாம் வகுப்பு வரையும் ௧௯௭௦இல் ஏழாம் வகுப்பு வரையும் 1973இல் பத்தாம் வகுப்பு வரையும் தரம் உயர்த்தப் பட்டது.இந்த பாடசாலையின் தரம் உயர உயர அதன் பலனாக மடத்துவெளி ஊரதீவு வல்லன் பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியும் உயர்வு கண்டது எனலாம். எண்பதுகளில் 260மாணவர்கள் கல்வி கற்க 12 ஆசிரியர்களும் மூன்று தொண்டர் ஆசிரியர்களும் பணியாற்றியது பெருமை மிக்க விசயமாகும் .
ஆரம்ப காலத்தில் இல்லையப்பா வாத்தியாரும் பின்னர் துரையப்பா வாத்தியாரும் அதிபர்களாக பெறும் பணியாற்றினர். தொடர்ந்து ச.சொக்கலிங்கம் .த.பொன்னையா போன்றோரும் அதிபர்களாக பணி புரிந்தார்கள்.ச.சொக்கலிங்கம் அவர்களின் காலத்தில் அவரது பெரு முயற்சியினால் தற்கு பக்கமாக மத்தியில் உள்ள கட்டிடம் அரச உதவியின்மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களின் தொண்டு அடிப்படையிலும் கட்டப் பட்டது. சொக்கலிங்கம் அதிபர் அவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சேவை நேரம் போக வேறு நேரத்திலும் பிரத்தியேகமாக வகுப்புகளை நடாத்தி கிராம மாணவர்களின் கல்விக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது. அடுத்து அதிபாரக பொறுப்பேற்ற த.பொன்னையா அவர்கள் அந்த பகுதி இளைஞர்களின் ஒத்துழைப்பை பெற்று பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பாடு பட்டார்.இவரது காலத்தில் மூன்றாவது விஞ்சான ஆய்வு கூட கட்டிடம் அமைக்கப்பட்டது . இல்ல விளையாட்டு போட்டிகள் .தமிழ் தின போட்டிகள் என படசாளி களை கடடிய காலம் இது .
உயர் வகுப்பு மாணவர்களின் தமிழ் கல்விக்கு ஆசானாக விளங்கிய இவருக்கு உதவியாக பிரபல சமூக சேவகரான யோ.பூராசா அவர்கள் உப அதிபராக இருந்து பின்னர் அதிபராக பதவி ஏற்றார் .யோ.பூராசா அவர்கள் அந்த பகுதி பெற்றோர் பழைய மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மடத்துவெளி சன சமூக நிலையத்தின் சேவை நலனையும் பயன் படுத்தி கல்வி விளையாட்டு மொழிவளர்ச்சி சிரமதானம் பொதுப்பணி என பாடசாலையை சிறப்பாக வாழி நடத்தி பெருமை சேர்த்தார் .இவரை பின் தொடர்ந்து சண்முகநாதன் மு மகேந்திரன் ஆகியோர் அதிபராகினர்.1991இல் மக்கள் இடம்பெயர அதிபராக இருந்த மு.மகேந்திரன் யாழ்ப்பாணத்தில் ஆனைப்பந்தி உயர்களைக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிலையத்தில் இந்த பாடசாலை மாணவர்களோடு சித்திவிநாயர் திருநாவுக்கரசு குறிகட்டுவான் அ மி த பாடசாலை மாணவர்களையும் ஒன்று சேர்த்து தற்காலிகமாக இயக்கினர் . மீண்டும் 1996இல் அப்பாடசாலை உப அதிபராக இருந்த ஊரதீவின் பொதுச்சேவை முதன்மையாளரான ந.இராசதுரை அவர்கள் இப்பாடசாலையை மறுசீரமைத்து தொடக்கி வைத்தார் .பின்வந்த காலங்களில் இவரே அதிபராக பதவி ஏற்றார் .இவரது ஓய்வுக்கு பின்னர் மற்றுமொரு மண்ணின் மைந்தரான ந.நாகராசா அதிபராகி இப்போது வரை பணி புரிகிறார்.இந்த பாடசாலையில் இந்த பகுதி ஆசிரியர்களான க.ஐயாத்துரை க தியாகராச போன்றோர் ஆசிரியப் பணியோடு இந்த பாடசாலைகென அமைச்சக தொடர்புகள் நிர்வாக பணிகள் மற்றும் போதுசெவியாகள் என நிறைய பணிகளை ஆற்றியதை மறக்கக முடியாது அண்மைய காலத்தில் பொதுநல சேவையாளரான வி.இராமநாதன் இந்த பாடசாலையின் கிழக்கே அமைந்துள்ள வயல் காணியினை பாடசாலைக்கென வழங்கி உள்ளார்.
இந்த பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்ற மாணவர்களில் மிகவும் கடுமையான ஏழாம் தர புலமைப் பாரிஸில் பரீட்சையில் ந.சொக்கலிங்கம் ,சிவ.சந்திரபாலன் போன்றோர் சித்தியெய்தி வழிகாட்டினர். தொடர்ந்து ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையிலும் ஏராமான மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலையின் வளர்ச்சியில் உதாரணமாகினர். இந்த பாடசாலையின் மாணவர்கள் ஏராளமானவர்கள் யாழ் உயர்தர பாடசாலைகளில்போட்டி பரீட்சைகளில் தேறி உயர்கல்வியை பெற சென்றமை குறிப்பிடத்தக்கது.விடுதி மாணவர்களாகவும் தாங்கி கல்வி கற்று வந்தனர். அத்தோடு புங்குடுதீவு மகா வித்தியாலயம் வேலணை மத்திய கல்லூரிகளையும் இவர்களே அலங்கரித்தனர் .இந்த பாடசாலைகளின் மாணவ தலைவர்கள் மாணவர் மன்றங்கள் என பொறுப்பான பல பதவிகளை வகித்து ஊருக்கு சிறப்பு சேர்த்தனர் .இந்த பாடசாலையின் கல்வி கற்றவர்கள் மாருதுவர்கள் சட்டத்தரணிகள் நிர்வாக சேவையினர் ஊடகத்துறையினர் கலைத்துறையினர் என தாயகத்திலும் உலகம் பூராவும் வலம வருவது பாராட்டத்தக்கது .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP