புங்குடுதீவு மேற்கு அரியநாயகன் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில்.
இக் கோவில் 300 ஆண்டுப் பழைமையானது. தொடக்கத்தில் ஆலமர அடியில் வழிபாடு நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டிலில் கோவில் அமைந்தது. வழிபாடு செய்தவர்களில் செட்டி உலகன் என்பவரும் ஒருவர். இவர் வாழ்விடம் செட்டிவளவு எனப்பட்டது. சிவபூசைக்கான கிணறும் ஒன்று இருந்துள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் கோயில் அமைக்கப்பெற்றுக் கும்பாவிஷேகமும் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து விநாயகர் விக்கிரகம் கொணரப்பட்டுப் பிரதிட்டை செய்யப்பட்டது. 1973 ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் தைப்பூச நாளினைத் தீர்த்தத் திருவிழாவாகக் கொண்டு கொடியேற்றத்திருவிழா தொடங்கப்பட்டது. தீர்த்த உற்சவம் கழுதைப்பிட்டித்துறை முகத்தில் நடைபெறும். 1986 ல் சித்திரத்தேர் செய்யப்பட்டது. சித்திரத்தேர்ச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. கும்பாபிஷேக மலர்கள் 1973, 1989, 2004 களில் வெளியிடப்பட்டுள்ளன. 1991 ல் நடைபெற்ற இடம்பெயர்வு ஆலய வழிபாட்டைத் தொடரத்தடையானது. 1991 – 1997 வரை அன்னம்மா அம்மையார் பூசை செய்தார். 2004ல் வெளியிடப்பட்ட கும்பாபிஷேகமலர் கோயிலைப் பற்றிய பிற்காலத்தகவல்களைத் தருகிறது.
0 comments:
Post a Comment