Saturday, August 28, 2010

புங்குடுதீவு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை .


புங்குடுதீவுப் பகுதிக்கான மின்விநியோகத்தைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.


இதன் முதற்கட்டமாக காரைநகரிலிருந்து கடல் மார்க்கமாக புங்குடுதீவுக்கு கேபிள் இணைப்புகளைப் பொருத்தும் பணிகள் பூர்த்தியாகும் நிலையிலுள்ளதாகவும் அத்துடன், புங்குடுதீவில் புதிதாக மின்தூண்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கப்பட்டு வருவதாகவும் மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் புங்குடுதீவில் உள்ளவர்கள் சீரான மின்விநியோகத்தைப் பெறுவதற்கு வழியேற்பட்டுள்ளதோடு, மாணவர்களும் விவசாயிகளும் இதனால் பெரும் நன்மையடைவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP