Wednesday, March 18, 2020

திரு. ஐயம்பிள்ளை குமரைய்யா அவர்களின் மரண அறிவித்தல்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை குமரைய்யா அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சந்திரகலா(கனடா), சிவகுமாரன்(சுவிஸ்), சூரியகலா(டென்மார்க்), விஜயகலா(லண்டன்), யமுனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 சிறிரஞ்சன், சுபாசினி, மோகனபாலன், சற்குணராஜா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவசுப்பிரமணியம், சிந்தாமணி, இராஜேந்திரம், வைத்திலிங்கம், தம்பாபிள்ளை மற்றும் குணமாலை(கொழும்பு), காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம், பூபாலசிங்கம் மற்றும் சிவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதி, மகேஸ்வரி, சிவஞானம் மற்றும் அங்கையற்கண்ணி(புங்குடுதீவு), அன்னலெட்சுமி(கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் ரதிதேவி(கொழும்பு), விஜயலெட்சுமி(சுவிஸ்), நிலா(கனடா), புஸ்பராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோகம்மா(லண்டன்), காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தியாகராஜா மற்றும் கண்ணம்மா(கொழும்பு), சோமசுந்தரம்(லண்டன்), காலஞ்சென்ற பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பூபாலசிங்கம் மற்றும் கமலாதேவி(யாழ்ப்பாணம்), பன்னீர்ச்செல்வம்(கொழும்பு), செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 துஷாந், கிருஷாந், திவ்ஜானி, தக்‌ஷா, ஜாகுலன், யதுரன், லதுஷன், கார்த்திகன், சாத்வீகன், கிர்சியா, லக்‌ஷா, சகீஸ், ரேஷ்மி, கனிஷ்கா, தீக்சி ஆகியோரின் அருமை பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்Address: Get Directionஇல. 20, 2/3 தொடர்மாடி, கொட்டாஞ்சேனை, கொழும்பு
தொடர்புகளுக்கு
 சந்திரா - மகள்Mobile : +16474051027   ராசன் - மகன்Mobile : +41799010251   விமலா - மகள்Mobile : +4528601494   விஜயா - மகள்Mobile : +447541730318   யமுனா - மகள்Mobile : +447967711851

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP