பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட காணி சுவீகரித்தல் நடவடிக்கை.
புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாமுக்கான காணி சுவீகரித்தல் நடவடிக்கை பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மடத்துவெளி பகுதியில் உள்ள கடற்படை முகாம் அமைப்பதற்கான காணி சுவீகரித்தல் நடவடிக்கைக்காக வருகைதந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், உதவி பிரதேச செயலர், மற்றும் கடற்படை கட்டளை அதிகாரிகளிடம் ஊர் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்ததின் காரணமாக நில அளவை செயற்பாடு இடைநிறுத்தப்பட்டு அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளார்.
காணி உரிமையாளரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பொது மக்களுடன் புங்குடுதீவு சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
0 comments:
Post a Comment