Monday, January 26, 2015

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பகிரங்க அறிவித்தல்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையானது, சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை ஒன்றிணைத்து ஒரு விழாவினை சுவிசில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
 மேற்படி விழாவினை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச்; அல்லது ஏப்ரல் மாதமளவில் நடாத்துவது எனவும், மேற்படி விழாவில் “எந்தவித அரசியல் கலப்புமற்ற” கலை, கலாச்சார, நாட்டிய, நடனங்கள், நகைச்சுவை, இசைநிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி புங்குடுதீவு மக்களுடனான உறவினை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது. மேற்படி விழாவினை சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களை மாத்திரமல்லாமல் சுவிஸ்வாழ் “அனைத்து தமிழ் மக்களையும்” ஒன்றிணைத்து திறம்பட நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ் விழா குறித்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனைசபை உறுப்பினர்கள் மற்றும் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களின் கருத்துக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே. தயவுசெய்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களுடன் உடன் தொடர்பு கொண்டு உங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

 இவ்வண்ணம், த.தங்கராஜா செயலாளர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.

தகவல்…. சுவிஸ் ரஞ்சன்
உப தலைவர், &ஊடகப் பொறுப்பாளர்
(புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.)

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP