Tuesday, November 18, 2014

புங்குடுதீவு மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் அதியுன்னத சாதனை!

நேற்று நடைபெற்ற யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பொது பொருளியலில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று புங்குடுதீவு மண்ணுக்கும் தான் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார் கிறிஸ்ரி யுவராஜ்.
புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தை சேர்ந்த யுவராஜ் போர்க்கால சூழல், வரட்சி , வறுமை, பொருளாதார நெருக்கடி, மின்சாரமின்மை ,போக்குவரத்து கஷ்டம் என்பவற்றின் மத்தியில் அவற்றுக்கு ஈடு கொடுத்து போராடி எதிர்நீச்சல் அடித்து இந்த உயர்ந்த உன்னத ஸ்தானத்தை அடைந்துள்ளார் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இப்போது வரை புங்குடுதீவிலேயே வாழ்ந்து வரும் யுவராஜ் மென்மேலும் தன் வாழ்வில் பல உன்னத படிகளை கடந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் தான் பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் புகழ் சேர்க்க வேண்டுமெனவும்உலகம் பூராகவும் புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.
 
 
படங்கள் தர்சனாந்த் பரமலிங்கம்
 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP