Thursday, February 13, 2014

யாழ். புங்குடுதீவு வாள்வெட்டில் இருவர் படுகாயம்.

யாழ். புங்குடுதீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை  சேர்ந்த எஸ்.கஜயா (வயது 24), பத்தாம் வட்டாரத்தை சேர்ந்த சந்திரகாந்தன் (வயது 27) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு இடையில் புதன்கிழமை (05) இரவு ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP