புங்குடுதீவில் முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி
குடிபோதையில் முச்சக்கர வண்டியோட்டிச் சென்ற குடும்பஸ்தரொருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதில் புங்குடுதீவு ௫ ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பரமேஸ்வரன் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் சம்பவ தினமான நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னாரிலிருந்து புங்குடுதீவில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிபோதையுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியோரத்திலுள்ள வீட்டு மதிலுடன் மோதிக்கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
பத்து ஆண்டு காலமாக குடும்ப பிணக்குக் காரணமாக மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதித் திடீர் மரணவிசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்
0 comments:
Post a Comment