Saturday, March 23, 2013

நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது.

தீவகம் - நெடுந்தீவு குறிகாட்டுவான் படகுச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள அரச மற்றும் தனியார் படகு சேவைகள் போதுமானதாக இல்லை. அதனால் புதிய முன்மொழிவு ஊடாக புதிய படகு கொள்வனவு செய்ய நெடுந்தீவு பிரதேச சபை ஆலோசித்து வருகிறது.


கடந்த வருடங்களை விட தற்போது வெளியிடங்களில் இருந்து வரும் பயனிகளின் தொகை அதிகரித்து வருகிறது. அத்துடன் நெடுந்தீவு பயனிகள் போக்குவரத்து மற்றும் பொருள்கள் ஏற்றி இறக்குவதற்குக் கூட தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் படகுகள்  போதுமானவையாக இல்லை


இதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக புதிய படகு கொள்வனவு தொடர்பான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP