இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி! அமரர் நவரத்தினம் பன்னீர்செல்வம் (வீடியோ பன்னீர் - புங்குடுதீவு)
(திதி - 08-06-2012)
மண்ணின் மைந்தனாய் 01-02-1961
விண்ணின் விடிவெள்ளியாய் 01-06-2010
தமிழீழம், புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நவரத்தினம் பன்னீர்செல்வம் அவர்கள்!
வற்றிய கண்ணீரோடும் வாய்நிறைய வார்த்தையோடும் வாசல் வரை காத்திருந்து ஆண்டோ இரண்டு ஆகிவிட்டது. உங்கள் வரவோ பொய்யாகிவிட்டது. கனவோடு நிசத்தைத்தேடி, கண்ணீரால் குளமாக்கி பன்னீரைத் தேடுகின்றோம். காலம்தான் ஓடியது கண்ணீர்தான் வற்றியது அந்தப் பன்னீர் எங்கே? விடை தேடி அலைகின்றோம், எப்போ விடை காண்போம்?
விடிவெள்ளியாய் இருந்து விளக்கேற்றி வைப்பதனை விடிய விடியப் பார்க்கின்றேன் - அந்த ஒளியிலே உங்கள் பாதச் சுவடுகளைத் தேடி அலைகின்றேன், வாழ்வே மாயமென நிரூபித்துக் காட்டிச்சென்று விட்டீர்களே!
எப்பிறப்பில் காண்போம் இனி!
அப்பா! மீண்டு வருவீர்களென விழித்திருந்து ஆண்டோ இரண்டு அப்பா, ஆனாலும் உங்கள் திரு முகத்தைக் காணவில்லை.
படித்து முடித்து விட்டோம், பட்டம் பெற்று விட்டோம், படமெடுக்கத் தேடினோம். உங்கள் கனவு நனவாகியது, எங்கள் கனவோ! உங்கள் நினைவாகி விட்டது.
கூப்பிடும் குரல் ஓசை கேட்குமா? கூடியிருந்து கதை பேசுவோமா? அந்த நாளை எதிர்பார்க்கின்றோம். உறவென்ற பாலத்தை உரமாகப்பிடித்த கரமெங்கே? உறவுகள் காணத்துடிக்கின்றனர்.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்வழிகாட்டியாய் வாழ்ந்தீர்களே! பிரிவென்னும் வலி தாங்காமல் புரட்டிப் பார்க்கின்றேன். சீரான வாழ்வு தந்து சிறப்பாக வாழ்வமைத்த சீராளன் பன்னீர் எங்கே?
சிந்திக்க வைத்து விட்டுச் சிறகடித்துப் பறந்தீர்களா? இல்லை, எமக்காக ஒளிதந்து ஒழித்திருந்து பார்க்கிறீர்களா?
என்னை ஒளியேற்றிக் கரம் கூப்ப வைத்து விட்டு ஓடிச் சென்ற மாய மென்ன?
மாயவலையில் சிக்குண்டு அனலில் இட்ட மெழுகாகிவிட்டேன்.
ஓடி வாராயோ! ஒரு தரம் பேசாயோ! கடைக்கண் பாராயோ!
உங்கள் பாதார விந்தங்களில் மலர் தூவி ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல அன்னை மகமாரியை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அன்பு மனைவி மக்கள், உறவினர்கள்
கனடா (9053855142)
0 comments:
Post a Comment