Saturday, April 14, 2012

திருமதி சிவானந்தராஜா தேன்மொழி அவர்கள்.

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தாவடி காங்கேசன்துறை வீதியை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராஜா தேன்மொழி அவர்கள் 09-04-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரெத்தினம்(புங்குடுதீவு 3ம் வட்டாரம், சபாரெத்தினம் பிறதர்ஸ் வத்தளை), புங்குடுதீவு 8ம் வட்டாரம் தாவடியைச் சேர்ந்த மகேஸ்வரி( திருப்பதி -பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை நாகம்மா(ஆசிரியர் புங்குடுதீவு 1ம் வட்டாரம்) ஆகியோரின் அருமை மருமகளும்,

தம்பிப்பிள்ளை சிவானந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

டெனிலா, கீர்தனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவபாலன்(பேர்லின்), தவநேசன்(லண்டன்), கிருபை தாசன்(சுவிஸ்), தயாபரராஜா நேசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரியா, மோகன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

பிரனேஸ், பிரனி, பிரவினி, பிரவிகா, ஏஞ்சல், டாவிட், ஆரோன், விஸ்னி, விநேஸ், விவேதா, விவேக்கா ஆகியோரின் அன்பு மாமியும்,

தயாபரராஜா, கோமதி, நாகேஸ்வரி, வனிதா, காலஞ்சென்ற விக்கிநேஸ்வரன், கோகிலாதேவி, தவதேவி, கலாதேவி, சண்முகநந்தன், நடராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்னையா, காலஞ்சென்ற நாகராயா, கனகசுந்தரம், காலஞ்சென்ற நாகநாதி, சிந்தாமணி, உலகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற புதிரகொன்டன் கருநாகரன்(கனடா), காலஞ்சென்ற இராசரத்தினம், நாகம்மா, பொன்னம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

மயோன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP