Saturday, September 17, 2011

திருமதி.ஏரம்பு சின்னம்மா .

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார். சரவணையைப் பிறப்பிடமஅகவும் புங்குடுதீவை வசிப்பிடமஅகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருமதி. அருணாதேவி குமாரதாஸ் (லண்டன்), சிறீதரன் (டென்மார்க்), திருமதி. மதிவதனி பிரபாகரன் (தமிழீழம்), மாவீரரான பாலச்சந்திரன் ஏரம்பு (கப்டன் அருண்)ஆகியோரின் தாயாரும், திரு. குமாரதாஸ் (டென்மார்க்), தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் (தமிழீழம்), திருமதி. சாந்தினி சிறீதரன் ஆகியோரின் மாமியாரும், பூர்னிமா (டென்மார்க்), வித்யா அனஸ் (டென்மார்க்), இந்துமதி (டென்மார்க்), அருணன் (டென்மார்க்), சந்துஜா (டென்மார்க்), சாள்ஸ் அன்ரனி (தமிழீழம், துவாரகா (தமிழீழம்), பாலச்சந்திரன் (தமிழீழம்) ஆகியோரின் பேத்தியும், நீலனின் பூட்டியும் ஆவார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP