Friday, October 10, 2014

நான் பிறந்த மண்ணில் நீர் மட்டும் தான் இல்லை – சின்னதம்பி குமாரதாஸ்

தண்ணி என்ற தலைப்பில் சின்னதம்பி குமாரதாஸ் இவர் எழுதிய சிறு ஆக்கம்

சிறு வயதில் பள்ளிக்கூடவிடுமுறைகளில் தென்னிலங்கை செல்வேன். அங்கு பச்சப்பசேலென காட்சிஅளிக்கும் தேயிலை, றப்பர், கமுகு, அன்னாசி, மரக்கறித் தோட்டங்களை என் கண்கள் படமெடுக்கும்.
விடுமுறை முடிந்து வீடு திரும்ப றெயின் ஏறி கோணர் சீற் பிடிப்பேன். சிங்கள மண்ணை மறைத்து நிற்க்கும் பசும் புல்தரை நெல் வயல்கள், தாமரை அல்லி தடாகங்கள், குலை குத்தி நிற்கும் செவ்விளனி தென்னம் தோப்புகள், அதை தாண்டி கிளி நொச்சி வரை பச்சயம் குறைந்த காடும், களனிகளும், பரந்தன் தாண்ட ஆனையிறவில் அனல் பாயும் கானல்.  மீண்டும் இயக் கச்சி பளை தென்னந்தோட்டம், கொடிகாமம் சாவகச்சேரி மா, பிலா, கைதடி புகையிலை, சிறிது பசுமை காட்டும் .
புங்குடுதீவு சென்ற பின் பனைமரமும், கொட்டணையும், தான் எனக்கு பசுமை காட்டும். கொழும்பு தண்ணியில் குளிச்சிற்று எங்கள் கிணத்து தண்ணியில குளிக்க மேல் பிசுபிசுக்கும், சவுகாரம் கரைய மறுக்கும். இது சிறு வயதில் என்னை கவலை கொள்ளவும் சிந்திக்கவும் வைத்தது. நான் பிறந்த மண்ணில் நீர் மட்டும் தான் இல்லை. இதற் கோர் விஞ்ஞானரீதியான தீர்வு காண வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை கனவாகவே இருந்தது.
இன்று வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களின் ஐக்கியமும், பொருளாதார பலமும் ஒன்று சேரும் போது என் கனவு நனவாகும் காலம் தூரத்தில் இல்லை என்று திடமாக நம்பு கின்றேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.