புங்குடுதீவு இறுப்பிட்டி 6 வட்டாரத்தில் முத்துவேலர் வீதி என்று அழைக்கப்படும் பாடசாலை வீதியின் (பாடசாலையின் பின் புறமாக தொடங்கி அரியநாயகன் புலம் பிள்ளையார் கோவில் வரையான 1.5 KM) முழு வீதி அமைப்பும் (சிறிய இடங்களில் ஏற்கனவே இருந்த பாதைகள் புனரமைப்பும்) கடந்த சிலவாரங்களாக நடைபெற்றது. தினமும் எமது பகுதியில் வாழும் மக்களால் பெருமளவு பயன்படுத்தப்படும் இவ்வீதி இன்று ஒரு முழுமையான வீதி போல் காட்சி அளிக்கிறது. இப்பாரிய பணிக்கு ஆதரவு அளித்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வேலையை செய்து முடித்த ஒப்பந்தகாரர்கள், பணியை தொண்டர் அடிப்படையில் மேற்பார்வை செய்த திரு. நல்லதம்பி வில்வநாதன், பணியாளர்களுக்கு தேவையான சாப்பாட்டு ஒழுங்குகளை கவனித்த திருமதி. வசந்தா மணியம், இவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் தொண்டர்கள், மற்றும் அதிகமான நிதி தேவைப்பட்ட போது அதை தந்து உதவிய கனடா / ஜேர்மன் வாழ் உறவுகள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.





No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.