Thursday, July 17, 2014

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முக்கிய செய்தி..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து அமைப்பினரால் புங்குடுதீவில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க, தண்ணீரத்; தாங்கி வாகனம் (பௌசர்) ஒன்று வாங்கிக் கொடுக்கும் நிகழ்வு இம்மாதம் (30.07.2014) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்விற்கு எமதூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், ஏனைய சமூகப் பணியாற்றும் அமைப்பினர், பொதுமக்கள் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு பணிவுடன் அழைக்கின்றோம். 

அத்துடன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற எமதூரில் உள்ள, சமூக சேவையில் ஆர்வமுடையோர் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். 

மற்றும் அனைத்துலகிலும் உள்ள எமது ஊரின் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களுடனும் நட்புடன் கூடிய தொடர்பைப் பேண புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிற்சர்லாந்து நிர்வாகசபை உறுப்பினர்களாகிய நாங்களும் ஆவல் கொண்டுள்ளோம்.

இவ்வண்ணம்,
த.தங்கராஜா
-செலயாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

தொடர்புகட்கு: 
தலைவவர்: திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ரவி) - 079.218 70 75
செயலாளர்: திரு.தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி) - 079.398 28 219
உபதலைவர்: திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) - 077.948 52 14

மின்னஞ்சல்: pungudutheevuswiss@gmail.com

**தகவல்...
சுவிஸ்ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்- புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.