Monday, January 20, 2014

புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய நூற்றாண்டு விழா இனிதே நிறைவுற்றது.

யாழ் புங்குடுதீவு  ஸ்ரீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா 18.01.2014 காலை 9.00மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் உயர்திரு. கலைநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநரின் செயலாளர் உயர்திரு. இ.இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு.சி.சத்தியசீலன் அவர்களும், வடமாகாண கல்விப் பணிப்பாளர் உயர்திரு.வ.செல்வராசா அவர்களும், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களும் பாடசாலை ஸ்தாபகரின் புதல்வனான வைத்தியக் கலாநிதி வி;.கனகரத்தினம் அவர்களும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனான லண்டனைச்சேர்ந்த குரு.கு.வி பஞ்சலிங்கம் அவர்களும் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை திருமதி நாகபூசணி கிருஸ்ணன் அவர்களும் பழைய மாணவனான பிரான்ஸைச் சேர்ந்த திரு.க சிவகரன் ஓய்வு நிலை அதிபரான திரு.சோ.குலசிங்கம் அவர்களும் பழைய மாணவனான திரு.க.தேவதாஸ் அவர்களும் விசேட அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உரையாற்றுகையில் தீவக மக்களது வாழ்விலே சைவமும் தமிழும் இருகண்களாக மிளிர்கின்றது.
சைவத்தையும் தமிழையும் போற்றிவளர்த்த பெருமை எங்களிடத்தே இருக்கின்றது. உண்மையிலே இந்தப்பாடசாலை நூற்றாண்டு விழா காண்கின்றதென்றால்அதற்க்காக கால்கோள் விழாவை எடுத்த ஸ்தாபகரையும் எங்கள் மனதிலே கொள்ளவேண்டும் கல்விப்புலமை மிகுந்த பலரை உருவாக்கிய தீவக மண்ணிலே நான் பிறந்ததற்காக உவகையடைகிறேன்.
இந்த மேடையிலே என்னையும் பிரதம விருந்தினராக அலங்கரித்த பெருமை என்னை ஆழாக்கிய ஆசிரியர்களையே சாருகின்றது.ஆசிரியத்தொழில் என்பது புனிதமானது பல அறிவாற்றல் நிரம்பிய சமூகத்தை கட்டியெழுப்ப ஊன்றுகோலாய் அமைகின்றது.
எனவே நூற்றாண்டைக் காணுகின்ற இவ்வித்தியாலயத்தின் மாணவ மணிளே உயரிய எண்ணங்களுடனும் சிந்தனையுடனும் கல்வி என்கின்ற கனியை உண்டுஅறிவாற்றல் நிரம்பிய சமூகமாக நீங்கள் பிரகாசிக்க வேண்டும். எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து விசேட அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் அறிவாற்றல் நிரம்பிய வீரம் விளைந்த தீவக மண்ணிலே நின்று பேசுவதில் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
புங்குடுதீவு என்கிற வனப்பு மிக்க மண்ணிலே ஓர் அறிவாற்றல் நிரம்பிய சமூகம் உலகெல்லாம் வியாபித்திருக்கின்றது. இந்த தீவக மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில் நானும் பெருமை கொள்கிறேன்.
எமது விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான விருட்சங்களை உருவாக்கிய மண்ணிலே தவழ்கின்ற அன்பான பிள்ளைகளே நீங்களும் நாளைய பொழுதுகளில் புதிய கல்வி சார் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகிறேன். எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.